“முன்னைய அரசு இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவைச் சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும்.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன.துறைமுக அபிவிருத்தி விடயங்களில் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.இதேபோன்று தான் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் எழுந்த வேளையில் குழுவொன்றை அமைத்து அந்த ஒப்பந்தத்தின் நன்மை, தீமைகளை ஆராயவும், எனக்கு அறிவிக்கவும் வலியுறுத்தினேன்.
இந்த விடயங்களை ஆராய்ந்த குழுவினர் எம்.சி.சி. ஒப்பந்தம் மோசமானது எனவும், அரசமைப்புக்கு முரணானது.எனவே, இந்த நிலைமைகளை அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் முன்வைத்த முறைமைக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாது என அறிவித்தோம்.எனத் தெரிவித்துள்ளார்.

