கொக்குவிலை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கொழும்பில் இடம்பெற்ற சோதனைகளின் போது உறுதியாகியுள்ளது.
பிரான்சில் குடியுரிமை பெற்ற 60 வயது நபர் ஒருவரே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடகாலமாக கொக்குவிலில் தங்கியிருந்த இவர் மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக கடந்த 20 ம் திகதி தனியார் வாகனமொன்றில் கொழும்பு சென்றுள்ளார்.
பிரான்ஸ் செல்வதற்கு பிசிஆர் சோதனை முடிவுகள் அவசியம் என்பதால் அவர் தன்னை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்..
தற்போது யாழ்ப்பாணத்தில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர் சென்றுவந்த இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

