கொரோனா வைரஸ் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து இன்றைய தினம் விசேட ஒத்திகை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம், பிலியந்தல பிரதேச வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் இன்றைய தினம் ஒத்திகை இடம்பெறவுள்ளதாகச் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், தடுப்பூசி செயல்முறை தொடங்கிய பின்னர் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை அடையாளம் காண்பதே ஒத்திகையின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

