லண்டனில் கடந்த 12 நாட்களில் 9 புலம்பெயர் தமிழர்கள் கொரோனா பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸால் உலகமே பெரும் அழிவைச் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் சமீப காலமாக லண்டனில் இனம் காணப்பட்ட கொரோனா வைரஸானது மிகவும் வீரியம் கூடியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பிரித்தானிய அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த 12 நாட்களில் 9 தமிழர்கள் கொடிய கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

