Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்

January 15, 2021
in News, Politics, World
0

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர் தினசரி கூலிக்கு பஞ்சாப் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்.

ஜனவரி 3ஆம் திகதி இவர் வீட்டிலில்லாத நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த 4 பேர் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தடயங்களை அழிப்பதற்காக அவரை அறைக்குள்ளேயே வைத்து தீயிட்டுக் கொளுத்தியதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை அளித்த அந்த புகாரில்,

‘’நான் பஞ்சாபில் தினசரி கூலிக்கு வேலை செய்துவந்தேன். எனது இளைய மகளுக்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்த என் மூத்த மகள் என்னை அழைத்து நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியதைக் கேட்டு இங்கு வந்தேன்.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் புகுந்து என்னுடைய 12 வயது மகளை மாறி மாறி வன்கொடுமைக்கு உட்படுத்தினர். அதன்பின்னர் தடயங்களை அழிக்க அவள் இருந்த அறையிலேயே அவளை தீவைத்துக் கொளுத்தி சாம்பலாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அந்தப் புகாரில், இதற்கு முன்பே கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களுடன் வருமாறு சிறுமியை வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான நான்கு பேரையும் பொலிஸார் தேடிவருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துஸ்பிரயோகங்களும், வன்முறைகளும் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம்

Next Post

இரத்தாகிப்போன மகிந்த ஏற்பாட்டு பொங்கல் விழா!

Next Post

இரத்தாகிப்போன மகிந்த ஏற்பாட்டு பொங்கல் விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures