Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

January 9, 2021
in News, Politics, World
0

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது எனவும்,. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்

பெரும் எண்ணிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கி இந்த அருவருக்கத்தக்க, ஈனத்தனமான செயல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள மாவை சேனாதிராசா, உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்த மிலேச்சத்தனமான ஆட்சியின் நீட்சியே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் இதுகுறித்து அனைத்துகக் கட்சிகள், தரப்புக்களுடன் ஆராய்ந்து வலுவான நடவடிக்கையை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ய

Previous Post

பல்வேறு அழுத்தத்தால் தூபியை இடித்தோம்- துணைவேந்தர்

Next Post

லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

Next Post

லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures