Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு!

January 8, 2021
in News, Politics, World
0

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்தியாவிடமும் கையளிக்கப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வரைபைக் கையளித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன்போதே தமது யோசனைத் திட்டத்தை ஜெய்சங்கரிடம் சம்பந்தன் கையளித்தார்.

21 பக்கங்களைக் கொண்ட இந்த யோசனைத் திட்ட வரைபில், “புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்துக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால் அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

தீர்வு விடயத்தில் இந்தியா மீது சம்பந்தனுக்கு முழு நம்பிக்கை!

Next Post

தயாசிறிக்குக் கொரோனா!

Next Post

தயாசிறிக்குக் கொரோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures