இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின
இதன்படி இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.
வெலிபென்ன பகுதியை சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான மார்பு நோய் மற்றும் கொரோனா நியூமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நியூமோனியா, இதய நோய் நிலைமை மற்றும் வலிப்பு நோய் என்பனவாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

