பூம்புகார் கடற்கரை குடியிருப்பு திடத்தில் மிகவும் வறிய நிலையில் வீடற்று இருந்த நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராசதுரை .சபீரன் குடும்பத்திற்கு இன்று மாலை 4.மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ .சுமந்திரன் அவர்களால் வீடு கையளிக்கப்பட்டது .
“எமக்காக நாமாவோம்” என்கின்ற கருப்பொருளோடு இயங்கும் இலங்கை இளையோர் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் ,சமூக சேவையாளர் இம்மானுவேல் தயாளன் அவர்களின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட அரை நிரந்தர வீடு குறுகியகாலத்தில் அமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது .
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அடிப்படை வசதியற்ற குடும்பங்கள் அனைவருக்கும் இப்படியான வீடுகள் அமைத்து வழங்கப்படுவது தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்ததோடு சமூக அக்கறையுடனான செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார் .
அமைப்பில் தலைவர் ம.இளங்கோ அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் உரிமையாளருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .





