Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் திறப்பு

December 23, 2020
in News, Politics, World
0

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவால்
கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், ஜேதவனாராமய விகாரை பூமியில் நாக மரக் கன்றொன்றை நாட்டி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம், பிரதமரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.

மத்திய கலாசார நிதியத்தின் 5 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்துக்கு இணையாக புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக சாலை அமைப்புக்கு 8 கோடியே 20 லட்சம் ரூபா ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் மதிப்புமிக்க இடிபாடுகள் மற்றும் புதைபடிவங்களைப் பாதுகாக்கும் செயற்பாடு ஜேதவன தொல்பொருள் அருங்காட்சியகத்தினூடாக முன்னெடுக்கப்படுவதுடன் அது இலங்கை கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட பெருமை மிக்க படைப்பாகும்.

பிரதமரின் எண்ணக்கருவுக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று மதிப்புமிக்க திட்டம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையின் மகிமையை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா தடுப்பு மருந்து ; ரஷ்யாவில் இருந்து கொண்டுவர தீர்மானம்

Next Post

பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை

Next Post

பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures