Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலாலி விமான நிலையம் இப்போது திறக்கப்படமாட்டாது

December 22, 2020
in News, Politics, World
0

எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. எனினும், பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள் திறப்பு தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியிலேயே ஆராயப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பலாலி விமான நிலையமும் தற்காலிமாக மூடப்பட்டது. எனினும், கடந்த நல்லாட்சி அரசு திறந்து வைத்த இந்த விமான நிலையத்தை ராஜபக்ஷ அரசு ஒரேயடியாக மூடிவைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

அத்துடன் பலாலி விமான நிலைய சேவையை உள்ளூர் சேவையாக மட்டுப்படுத்திக் கொண்டு, அம்பாந்தோட்டையிலுள்ள மத்தள விமான நிலையத்தை (மஹிந்த ராஜபக்ச விமான நிலையம்) சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்க அரசு இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.

மேற்படி செய்திகள் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 26ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளது. பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள் இப்போது திறக்கப்படாது. அவை திறக்கப்படுவது தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியில்தான் ஆராயப்படும் என்று அமைச்சர் அதற்குப் பதிலளித்தார்.

Previous Post

பாடசாலைகள் ஜனவரி 11 ஆரம்பம்

Next Post

இன்றும் இடியுடன் கூடிய மழை

Next Post

இன்றும் இடியுடன் கூடிய மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures