Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ப .சத்தியலிங்கம் அரசியலில் ஓய்வு பெறுகிறார்

December 17, 2020
in News, Politics, World
0

முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாத்திற்கு வெற்றிடமாக காணப்பட்ட வைத்திய அதிகாரி பதவிக்கு ப.சத்தியலிங்கமும் விண்ணப்பித்திருந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இதற்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்ற நிலையில் நேர்முகத்தேர்வின்போது குறித்த பதவி கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவீர்களா? முன்பு சுகாதார அமைச்சராக இருந்தீர்கள் எதிர்வரும் காலத்தில் முதலமைச்சராவதற்கு எத்தனிப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது.

இதன்போது ப.சத்தியலிங்கத்தினால் அவ்வாறான எண்ணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பதவிக்கான நியமனம் ப.சத்தியலிங்கத்திற்கே கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோது, நேர்முகத்தேர்வுக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் சென்றிருந்தேன். தற்போது நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் எவ்விதமான கடிதமோ, தொலைபேசி மூலமான தகவலோ எனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

Previous Post

உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இல்லை

Next Post

இலங்கையில் சமூக தொற்றை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும் – திஸ்ஸ விதாரண

Next Post

இலங்கையில் சமூக தொற்றை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும் – திஸ்ஸ விதாரண

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures