கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கமைய 1445 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

