அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எழுமாறான முறையில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின், பாலமுனை, ஒலுவில், தீகவாபி, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில் நாளாந்தம் இப்பரிசோதனை நடவடிக்கையின் கீழ் 1200க்கும் அதிமானவர்களிடம் இப்பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
இதே வேளை, வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் தொற்றுடன் தொடர்புள்ளவர்கள், தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறிந்தவர்கள் கட்டாயம் சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதுடன அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதும் அவசியமாகும்.
தற்போது, எமது அயல் கிராமங்களிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எமது முடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் தத்தமது வீடுகளில் இருக்குமாறும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

