கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்ட ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிதி அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.
கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து இத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும், அதற்கு நிதி அமைச்சின் ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.

