Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

December 4, 2020
in News, Politics, World
0

பொலன்னறுவை மாவட்டத்தில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராய, விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த குழுவின் அறிக்கையை, இரண்டு வார காலத்துக்குள் சமர்பிக்குமாறு, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று (03) இடம்பெற்றது.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே, அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை மனம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள யக்குரே வீதியை, மீண்டும் திறப்பது குறித்து ஆராய்வதற்காக, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, குறித்த விஜயத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வயல் வெளிக் காணியை விடுவிப்பது என்பன தொடர்பில், குறித்த குழு கவனம் செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்ட பணிப்புரையை, செயற்படுத்தாமைக்கான காரணம் குறித்தும், அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

Previous Post

மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயம்

Next Post

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம்.

Next Post

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures