Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயம்

December 3, 2020
in News, Politics, World
0

வவுனியா கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை அவதானிக்காது வந்த பார ஊர்தியொன்று குறித்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் கடும் காற்று காரமாக வீதியோரத்தில் நின்ற வாகை மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
மற்றும் நகரசபை ஊழியர்கள் குறித்த மரம் வீழ்ந்துள்ள இடத்தினை பார்வையிட்டு அகற்றும் செயற்பாட்டை

இதன் போது கண்டி வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியொன்று வேகமாக வருவதை கண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கூக்குரல் இட்டும் மரத்தினை காட்டியும் சாரதிக்கு சைகை காட்டியுள்ளனர்.

எனினும் அதனை அவதானிக்காத பார ஊர்தியின் சாரதி மரத்தில் மோதியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது வாகனத்தில் காயமடைந்த சாரதியை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் ஏ9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மரத்தினை அகற்றும் பணியினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகரசபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்

Next Post

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

Next Post

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures