Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு விஜயம்

November 27, 2020
in News, Politics, World
0

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார்.

இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இறுதியாக 2014’ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

இதற்காக மாலைதீவின் பிரதிநிதிகளும் இன்று இலங்கை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை வருகின்ற அஜித் டோவால் மாலைதீவு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவுடன் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஒக்டோபர் மாதம் சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வந்து சென்றதை அடுத்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்திருந்தார்.

அதனை தொடர்ந்து இடம்பெறும் உயர்மட்ட வெளிநாட்டு ராஜதந்திர விஜயமாக அஜித் டோவாலின் விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை கண்காணிக்க விசேட குழு

Next Post

இலங்கை பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ்.பல்கலை மூன்றாம் இடம்

Next Post

இலங்கை பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ்.பல்கலை மூன்றாம் இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures