Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் ஜனாதிபதி இன்றும் விசாரணைக்கு அழைப்பு

November 25, 2020
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி 8 மணித்தியாலங்கள் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவரை இன்றும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன வசமே பாதுகாப்பு அமைச்சு இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளது எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும் அந்தக் குற்றச்சாட்டுகளை மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்ததுடன் அதில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் தடவையாக ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். அந்தவகையில் அவர் இன்று 8ஆவது தடவையாக ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.

Previous Post

நல்லூரில் பெண் ஒருவருக்கு கொரோனா

Next Post

மாவீரர் நாள் நினைவேந்தல்: இன்று தமிழ் தேசியக் கட்சிகளின் முடிவு

Next Post

மாவீரர் நாள் நினைவேந்தல்: இன்று தமிழ் தேசியக் கட்சிகளின் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures