Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

November 23, 2020
in News, Politics, World
0

2021 ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார்.

மேலும் தற்போது இராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களிற்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார்.

அத்தோடு பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் காணப்படும்.

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற பிரவேசம் ஜனவரியில் இடம்பெறுமென தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பசில் ராஜபக்சவும் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவாரென தெரிவித்துள்ளன.

மேலும் இந்த வாரம் பசில்ராஜபக்சவை சம்மதிக்கவைப்பதற்கான முயற்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனதுறை அமைச்சராக பதவி வகிப்பார்.

அத்தோடு இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சமல்ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Previous Post

இலங்கைக்கு மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

Next Post

தவராசா கலையரசனுக்கு தடை உத்தரவு கட்டளை

Next Post

தவராசா கலையரசனுக்கு தடை உத்தரவு கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures