Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்- அங்கஜன்

November 14, 2020
in News, Politics, World
0

மகிழ்ச்சியான இந்நாளில் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும் என நாடளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இருளில் இருந்து வெளிச்சத்திற்கும்,தீமையில் இருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் தீபங்களை ஏற்றி இசமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம்.

தீபங்களின் வரிசையால் புற இருள் விலக்குவதனைப் போன்று எமது மனங்களை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது,வஞ்சகம்,கர்வம் போன்ற தீய எண்ணங்களை விலக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்.இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலையில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எமது நாடு கொரோனா எனும் தீமையில் இருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.இத் தீபாவளிப் பண்டிகை கொரோனா எனும் கொடிய நோயினை அழிப்பதற்கானதாக அமையட்டும்.அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியான இந்நாளில் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்.

Previous Post

கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல

Next Post

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும்- பிரதமர்

Next Post

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும்- பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures