Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறை!

November 12, 2020
in News, Politics, World
0

திருகோணமலை – சீனக்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை நேற்று (11) நீதிமன்றில் வாசித்துக் காட்டினார்.

2012ஆம் ஆண்டு சீனக்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலைய விடுதியில் வசித்துவந்த ஒன்பது வயது சிறுமி அருகில் உள்ள வீட்டுக்கு காற்றடிக்கும் பம் கொடுக்கச் சென்ற நிலையில் பிள்ளை வீட்டுக்கு திரும்பி வரவில்லை என அவரது தந்தை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது பாழடைந்த வீட்டுக்குள் வைத்து தனது நண்பர் மூலம் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை ஒன்பது வயது சிறுமியை பாலியல் குற்றம் செய்தமை தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று (11) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பினை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டினார்.

இதில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.

இதேவேளை அரச செலவாக பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

Previous Post

இன்றுடன் மகிந்த தேசப்பிரிய தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் !

Next Post

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures