Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை தேர்தல்: அதிகூடிய வயதெல்லை 55

November 12, 2020
in News, Politics, World
0

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை உருவாக்கப்படலாம் என்று அரச மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது அரசமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் குறைந்த வயதெல்லையாக இருந்த 30 வயது, 36ஆக மாற்றப்பட்டது.

இருப்பினும் 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த வயதெல்லையை மீண்டும் 30ஆக மாற்றியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசியலைமப்பில் அதிகூடிய வயதெல்லை எது என்று குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி அரசு கருத்து வெளியிட்டு வருகின்றது. இதில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் அதிகூடிய வயதெல்லையை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த யோசனைக்கு அரச உயர்பீடமும் இணங்கியுள்ளது என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

Previous Post

யாழ் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வெளிநாட்டவர்கள் அனுமதி!

Next Post

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து 51 இலங்கையர்கள் இன்று வந்தனர்

Next Post

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து 51 இலங்கையர்கள் இன்று வந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures