Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மத்திய வங்கி வழங்கவுள்ள சலுகைகள்

November 10, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், 6 மாதத்தினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதி கடன் பெறுநர்களுக்கு வழங்கப்படும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடன்பெறுநர்கள் இந்நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடன்பெறுநர்கள் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைப்பதன் மூலம் தமக்கான சலுகைக் காலத்தினை நீடித்துக் கொள்ள முடியும் என மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா, விவசாயம், கட்டுமானம், உணவு உற்பத்தி ஆகிய தொழிற்துகைள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதுக் குழந்தை பலி-நால்வர் படுகாயம்!

Next Post

இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் புதுப்பிப்பு

Next Post

இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் புதுப்பிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures