Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏழு புதிய வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற குழு அனுமதி

November 10, 2020
in News, Politics, World
0

வெளிநாட்டுத் தூதுவர்களாகச் சேவையாற்ற இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழு நேற்று (2020.11.10) அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் உயர்பதவிகள் பற்றிய குழு கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஹமட்.ஏ. ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான தூதுவராகவும், தர்சன பெரேரா சுவீடனுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான தூதுவராகவும், டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சமிந்த கொலன்னே தாய்லாந்துக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், எயார் மார்சல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

36ஆவது உயிரிழப்பு பதிவாகியது

Next Post

நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை

Next Post

நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures