Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா இரட்டைக் கொலை – காயமடைந்தவரும் பலி

October 19, 2020
in News, Politics, World
0

வவுனியா- மாணிக்கர் வளவுப்பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததுடன், கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு- கரிப்பட்ட முறிப்பு பகுதியைசேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் (40 வயது) மற்றும் முல்லைத்தீவு கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன்(34 வயது) ஆகிய இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது!!

Next Post

கிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு

Next Post

கிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures