மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், எமது ஊழியர்களில் சிலர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி யுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் கொரோனாவின் அதிக பாதிப்பு நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
எமது பாதிக்கப்பட்ட ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் வெகு விரைவில் நல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

