Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியா!

August 22, 2020
in News, Politics, World
0

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

மேலும், பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.

Previous Post

பூர்வீக குடிகள் தமிழர்கள் என்ற சி.வியின் கருத்து தவறானது – மனுஷ

Next Post

இலங்கையில் முதன்முறையாக சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு !

Next Post

இலங்கையில் முதன்முறையாக சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures