Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

1600 இலங்கையர்களை கொரியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கை!

August 19, 2020
in News, Politics, World
0

தொழில் ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

விசேட விமான சேவையை முன்னெடுத்து 1,600 இலங்கையர்கள் கொரியாவிலிருந்து அழைத்துவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு அழைத்துவரப்படுவோரை தனிமைப்படுத்த வௌிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் வரை, நாட்டிலிருந்து கொரியாவிற்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களை அனுப்பாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரியாவின் மனித வள அபிவிருத்தி நிலையத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கிம் வோன் சோக்குடன் (Kim Won Seok) தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இவற்றைத் தெரிவித்துள்ளார்.

கொரியாவிற்கு தொழிலுக்கு செல்லும் எதிர்பார்பிலுள்ள 200 பேருக்கான விசேட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிக்கவும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

Previous Post

காணாமல் போன பிக்குவை கைதுசெய்ய நடவடிக்கை!

Next Post

அங்கொட லொக்காவிற்கு எதிராக இதுவரை 3 முறைப்பாடுகள்

Next Post

அங்கொட லொக்காவிற்கு எதிராக இதுவரை 3 முறைப்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures