உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கட்சியில் இருந்து விலகி பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கர சர்மாவிற்கு பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிக்க டெலோ கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் மனோ ஐங்கர சர்மா போட்யிட்டு வெற்றி பெற்று மன்னார் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட குறித்த நகர சபை உறுப்பினர் தான் கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த நகர சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்தமையை தொடர்ந்து,அதனை பரிசீலினை செய்த தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அவர் வகித்த மன்னார் நகர சபை உறுப்பினர் பதவிக்கு பதிலாக கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மனோ ஐங்கர சர்மாவிற்கு பதிலாக மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிட்ட சமாதான நீதவான் என்.கணேசலிங்கம் அவர்களை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அறிவித்துள்ளது.

