Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுத் தேர்தலின் பின்னர் கொரோனா பாதுகாப்பு ; சுகாதார வழிகாட்டல் நாடாளுமன்றத்துக்கு

July 29, 2020
in News, Politics, World
0

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், நாடாளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தலைமையிலான சுகாதார அமைச்சின் குழுவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டு இது குறித்து ஆராய்ந்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தயாரிக்கும்போது நாடாளுமன்ற சபா மண்டபம், உணவுக் கூடம் மற்றும் நாடாளுமன்ற நூல்நிலையம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட விருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார அமைச்சின் ஊடாக இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்படுவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான கல்லுடைக்கும் தொழிலாளருக்கு விடிவு ;வி. சகாதேவன் உறுதி

Next Post

கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 பேர் தாயகம் திரும்பினர்

Next Post

கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 பேர் தாயகம் திரும்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures