அனுமதியின்றி இலத்திரனியல் சிகரட் தொகையுடன் இருந்த சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட கலால் அதிகாரிகளால் நேற்று இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – பேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் 8 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் சிகரட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.