7-வாகனங்கள் மோதிய விபத்தில் 80-வயது மனிதர் மரணம்.
கனடா-ரொறொன்ரோ, நெடுஞ்சாலை 401 மிசிசாகாவில் சனிக்கிழமை ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 80வயதுடைய மனிதர் ஒருவர் கொல்லப்பட்டார்.
நெடுஞ்சாலை கிழக்கு பகுதி லேன்களில் டிக்சி வீதி கிழக்கில் சனிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
இறந்தவரின் அடையாளங்கள் வெளியிடப் படவில்லை.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு இறந்து விட்டார்.
வேறு மூவர் சாதாரண காயங்களுடன் தப்பிவிட்டனர்.
விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.