மிஷன் மங்கள் படத்திற்கு பிறகு ஹிந்தியில் ‛சாந்த் கி ஆங்க், டட்கா, தப்பாட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. இவற்றில் ‛சாந்த் கி ஆங்க், தப்பாட்’ படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
‛சாந்த் கி ஆங்க்’ படத்தில் 60 வயது பெண்ணாக நடித்துள்ளார் டாப்சி. துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த உ.பி.,யை சேர்ந்த 65 வயதை கடந்த வீராங்கனைகள் சந்திரோ தோமர், பிரகாஷி தோமர் ஆகியோரின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை பூமி பட்னேகர் உடன் இணைந்து நடித்துள்ளார் டாப்சி. படம் தீபாவளிக்கு வெளியாவதால் தற்போது படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 60 வயது கேரக்டரில் தான் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார் டாப்சி.













