Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு

December 31, 2020
in News, Politics, World
0

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு வத்தளை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான் ஸ்ரீ புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நால்வரில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்த நால்வரின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த ஏனையவர்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோனைகள் இடம்பெற்று வருகின்றன.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாகக் கொண்டு அங்கு சில வாரங்களுக்கு முன்னர் அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர் என்பதுடன், 104 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பண்டிகை நிகழ்வுகளை குடும்பத்தாருடன் மட்டும் கொண்டாடுங்கள்

Next Post

குறைக்கப்படவுள்ள 450 கைதிகளின் தண்டனைகள்

Next Post

குறைக்கப்படவுள்ள 450 கைதிகளின் தண்டனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures