ஆந்திராவில் பிரதான எதிர்க்கட்சியாக ஓய்.எஸ்.ஆர்.காங்.கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, பிராஜ சங்கல்பா எனும் பாத யாத்திரையை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் , கடப்பா மாவட்டத்தில் தனது சொந்த கிராமத்தில் இருந்து துவங்கினார். 11 மாவட்டங்களில் 116 தொகுதிகளை வலம் வந்துள்ளார்.இன்று ஜெகனின் பாத யாத்திரை விசாகப்ட்டினம் வந்தடைகிறது இதன் மூலம் 3000 கி.மீ.தூரம் பாதயாத்திரை நடத்தி சாதனை படைத்துள்ளார். இது எந்த அரசியல் தலைவரம் செய்யாத சாதனை என கூறப்படுகிறது.ஆந்திராவில் 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி இந்த யாத்திரையை ஜெகன் மேற்கொள்கிறார்.

