300 பயணிகளுடன் இருந்த கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் சென்றுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்கள் கிடைக்கபெறாத நிலையில், பா-து-கலேயின் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் சென்றுள்ளது. ஆனால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 பயணிகள் கப்பலில் இருந்ததாகவும், 90 தொடக்கம் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் காராணமாக கப்பல் கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா-து-கலே பகுதிக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
300 பயணிகள் கப்பலில் இருந்தபோதும், விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது என அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

