அரலகங்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மின்ன இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 22 வயதான இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேராதனை ஹோடியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். தொடம்வெல என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இராணுவச் சிப்பாய் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
உயிரிழந்த படைச் சிப்பாயின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்று மேற்கொள்ளவுள்ளதுடன் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

