Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

21 ஆண்டுகள் கடந்த பின்னும் இரத்த ஆறு ஓடிய கோரமான கொடிய நாட்களை மறக்க முடியுமா???

July 10, 2016
in News
0
21 ஆண்டுகள் கடந்த பின்னும் இரத்த ஆறு ஓடிய கோரமான கொடிய நாட்களை மறக்க முடியுமா???
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

21 ஆண்டுகள் கடந்த பின்னும் இரத்த ஆறு ஓடிய கோரமான கொடிய நாட்களை மறக்க முடியுமா???

u1 u5

இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை..1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்தனர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன்னேற முயன்ற பகுதிகளில் விமானப் படையினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப்பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலிருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகரத் தொடங்கினர்.

அந்த விதத்தில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களில் ஒரு பெரும் தொகையினர் நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்தத் தேவாலயத்தை இலக்கு வைத்து விமானப் படையினரின் புக்காறா விமானங்கள் மேற்கொண்ட விமானக்குண்டு தாக்குதலில் அங்கு தங்கியிருந்த 153 பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் (09.07.2015) இன்றாகும். வரலாற்றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய வேளையில் (09.07.1995) ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர்களாலும் பாதுகாப்பு பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை இதுவாகும். மூன்று குண்டு வீச்சு விமானங்கள் ஒரே நேரத்தில் இந்த கோர தாக்குதலை மேற்கொண்டன.

குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையிலிருந்து, பலாலி இராணுவ முகாமிலிருந்தும் அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளிலிருந்தும் ஊர்மனை நோக்கி நாலாபுறமும் ஷெல் பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலி.மேற்கு, வலி.தெற்கு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளை நோக்கி காலை 5.40 மணியளவில் இருந்து மும்முனைத் தாக்குதல் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியில் உள்ள மக்கள் உடுத்த உடைகளுடனும் கையில் அகப்பட்ட உடைகளுடனும் கண்ணீரும் கம்பலையுமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

மாட்டுவண்டிகளிலும் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் லான்ட் மாஸ்ரர்களிலும் வட்டுக்கோட்டை, சங்கரத்தை, வளுக்கையாற்றுவெளி, நவாலி வீதி, நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி, சங்குவேலி, கட்டுடை மானிப்பாய் பிரதான வீதி வழியாக அவர்கள் சென்றனர். அவ்வேளையில் சகல வீதிகளிலும் எறிகணை தாக்குதல், ஹெலி தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. வீதிக்கு வீதி சடலங்கள், காயமடைந்தவர்களை எடுத்துச்செல்லக்கூடிய அளவிற்கு வாகன வசதிகளோ, மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இருக்கவில்லை. யாவும் செயலிழந்துவிட்ட அவலநிலை.

காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி, முதலுதவிச்சிகிச்சையின்றி, இரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த அந்த நாளைய நிலைமையை இலகுவில் மறந்து விடமுடியாது.

அன்றைய தினம் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக மக்கள் திரள் திரளாக நவாலி சென்.பீற்றர் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் களைப்படைந்த நிலையில் தஞ்சமடைந்தனர்.

அவ்வேளையில் விமானம் மூலம் 13 குண்டுகள் தொடர்ச்சியாக மக்கள் குவிந்திருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. சில கணங்களில் எங்கும் “ஐயோ’ என்ற அவலக் குரல்கள் அப்பகுதியை அதிர வைத்தன. விமானக் குண்டு வீச்சுக் காரணமாக 153 பேர் உடல் சிதறி கையிழந்து கால் இழந்து தலையிழந்து குற்றுயிராக கிடந்த கொடூரக்காட்சி இன்றும் மறக்க முடியாததாகும். இந்தக் கொடூர சம்பவத்தில் 153 பேர் உடல் சிதறி பலியானதுடன் பெரும் எண் ணிக்கையானோர் ஊனமானார்கள்.

இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவாக நவாலி வடக்கு புலவர் வீதியிலும், நவாலி புனித பேதுறுவானவர் வீதியிலும் நினைவு சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 147 அப்பாவிக் குடிமக்களை கணப்பொழுதில் பலியெடுத்த நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதல் தமிழர் தாயக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத இரத்தக்கறை படிந்த கோரமான கொடூரநாள் 09.07.1995 ஆகும். அந்த நவாலி படுகொலையின் நினைவை ஒரு கணம் மீண்டும் மீட்டுப்பார்க்கின்றோம்.

இந்தக் கொடுமையான பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதுடன் மக்களை சொல்லெணாத்துயரத்திற்கு இட்டுச் சென்றது. கடந்த 09.07.1995 தமிழர் வரலாற்றில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்றுதான் நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் (சின்னக்கதிர்காமம்) அழிந்து அப்பாவியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை காவுகொண்ட நாள்.

முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்காவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் ஷெல் ரொக்கட் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில், விமானப்படையினால் ஆடப்பட்ட ஓர் இனப்படுகொலையாகும். வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை, நிகழ்வுகளை மறக்க முடியாது. தமிழினம் மறக்காது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. முன்னேறிப்பாய்தல் எனப்பெயர்கொண்ட `லீட்போர்வேட்’ இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக்கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

திடீரென 09.07.1995 அன்று வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு வலி. தெற்கு, வலி.வடக்குப்பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்கள் அரச மற்றும் பொது நிறுவனங்களை நோக்கி காலை 05.20 மணியிலிருந்து விமானத்தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் தாறு மாறாக பாரிய சத்தங்களுடன் நடத்தப்பட்டன.

அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடுபுடவைகளுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய காட்சிகள் இன்றும் மறக்க மடியாத ஒரு நிகழ்வாக தமிழர் மனதில் வடுவாக பதிந்துள்ளது.

கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தள்ளுவண்டிகளிலும் மாட்டு வண்டில்கள், முச்சக்கர வண்டி மூலமாகவும் வழுக்கையாறு வெளி நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி கட்டுடை மானிப்பாய் பிரதான வீதி வழியாக கைக்குழந்தைகள், வயோதிபர், முற்றாக எழுந்து நடக்க முடியாதவர்கள் என பலரும் பல இன்னல்களை சுமந்த வண்ணம் சென்றனர்.

அவ்வேளையில், சகல வீதிகளிலும் ஹெலிகொப்டர் தாக்குதல் அகோரமான ஷெல் தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயப்பட்டவர்கள், இறந்தவர்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வாகனங்களும் இல்லை. வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற பொருளாதார தடையான மந்தமான காலப்பகுதியாகும். இதேநேரம், காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டால், அவர்களைக் காப்பாற்ற மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இயங்கமுடியாத அவலநிலை. இறுதியில் காயமடைந்தவர் சிகிச்சையின்றி இறந்த நிகழ்வுகளையும் மறக்க முடியாது.

அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தொடர்ச்சியாக விமானம் மூலம் 13 குண்டுகள் தான்தோன்றித்தனமாக மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. அவ்வளவுதான்! நவாலிக்கிராமம் ஒரு கணம் அதிர்ந்து வீதிகள் தடைப்பட்டு, மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகை மூட்டம் காணப்பட்டது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன. சுமார் 153 பேர் அந்த இடத்திலேயே குடாநாட்டின் பல்வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். இந்த நிகழ்வில் இக்கொடூரச்சாவானது கையிழந்து, காலிழந்து, தலையிழந்து, உடல்சிதறி குற்றுயிராகக் கிடந்த நிகழ்வுகளை எம்மால் மறந்துவிட முடியாது.

சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்ததை காணக்கூடியதாக இருந்தது. அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் நேரடியாகப் பங்கு கொண்ட வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்களான நவாலி வடக்குப் பிரிவு கிராம அலுவலர் செல்வி.ஹேமலதா செல்வராஜாவும், சில்லாலைப் பிரிவு கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளைவும் ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள், எவராலும் இவர்களை முறக்கமுடியாது.

அன்றையதினம் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியாது. 9 ஆம் திகதியான ஜூலை நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வருடா வருடம் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி 1995 ஆம் ஆண்டு நவாலி இனப்படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தர புலவர் வீதியிலும்,நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: Featured
Previous Post

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!

Next Post

வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி

Next Post
வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி

வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures