Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2024இல் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் – சம்பிக்க இடையே போட்டி

January 3, 2021
in News, Politics, World
0

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் எந்தவொரு போட்டியும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.

எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தைத் தலைவராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கிப் பயணிப்போம் – என்றார்.

Previous Post

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை!!

Next Post

புதிய யோசனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது சஜித் அணி

Next Post

புதிய யோசனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது சஜித் அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures