ஆங்கிலேய நடிகையான எமி ஜாக்சன், 2010ம் ஆண்டு வெளிவந்த ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்து புகழ் பெற்றார். இந்தியாவின் மிகப் பெரும் பட்ஜெட் படமான ‘2.0’ படத்தில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்த ‘2.0’ படமும், கன்னடத்தில் அவர் நடித்த ‘தி வில்லன்’ படமும் வெளிவந்தது.
அந்தப் படங்களுக்குப் பிறகு அவருக்கு எந்த மொழியிலும் வாய்ப்புகள் இல்லை. அவருக்கும் பெரிய பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. புத்தாண்டில் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு அவர்களது திருமணத்தை நிச்சயத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இப்போது, இருவருக்கும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிரீஸ் நாட்டிலுள்ள மைகோனாஸ் தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாம். அந்த இடத்தை காதலர்கள் இருவரும் சென்று தேர்வு செய்துள்ளார்களாம்.
எமியின் வருங்காலக் கணவர் மிகப் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குறைவுதான்