Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனை

November 10, 2017
in News, Politics
0

2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனை நேற்று  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்புக்கள்….

மங்கள தனது ஆரம்ப உரையில்,

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

யுத்தத்துக்கு பின்னர், தமிழர்களின் மனதை வென்றெடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம், எனினும், அந்த ஆட்சியாளர் தங்களுடைய குடும்பத்தை கட்சியெழுப்புவதில் அக்கறை கொண்டிருந்தார் எனக் குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை தொழிதுறையை ஊக்குவிக்கும் (எண்டர்பிரைஸ் பட்ஜெ) வரவு-செலவுத்திட்டம் என்று, மங்கள பெயரிட்டுள்ளார்.

இதற்கமைய, இதில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களாவன,

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பதிலாக ஹைபிரீட் வாகனங்களை அறிமுகப்படுத்த முன்மொழிவு.

இதற்கமைய, ஹைபிரீட் வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்க யோசனை

மின்னியல் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, டீசல் முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமுதி வரி அதிக்கப்படும்.

ஆடம்பர கார்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்படும்

இயந்திரத் திறனைப் பொருத்து, வாகன இறக்குமதிகளுக்கான வரிகள், மீள்திருத்தம் செய்யப்படும்.

மின்சார கார்களின் இறக்குமதி வரி குறைந்தபட்சம், ஒரு மில்லியன் ரூபாய் குறைக்கப்படும்

2018 ஆண்டளவில் புத்தளம், யாழ், மட்டக்களப்பு, யாழ், நந்திக்கடல், போன்ற 10 களப்புகளை புணரமைக்க மில்லியன் 10 ஒதிக்கீடு.

பொலன்னறுவை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் விவசாய களஞ்சியசாலைகளை நிர்மாணிக்க, யோசனை..

கடல்அட்டைகள் பிடிக்க, பாதுகாக்க கிளிநொச்சியில் – பூநரியில் விஷேட நிலையம் அமைக்க ஏற்பாடு

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 55 அடி நீளமான இழுவைப் படகுகளின் செலவு வீதத்தில், 50 வீதத்தை அரசு பொறுப்பேற்க உத்தேசம்

மட்டக்களப்பில் நீர்வாழ் உயிரியல் பூங்காவுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க முன்மொழிவு

பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு, 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட யோசனை..

சில கடன் தொடர்பான சலுகைகளை வழங்கவும் முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியடைய 100க்கு 10 வீதத்தை விட வட்டி சலுகை கடன்

சுயதொழில் புரிவோருக்கான கடன் திட்டத்துக்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம் வழங்கவும் முன்மொழிவு

கறுவா போன்ற வாசனை திரவியங்களின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்களை பாதுகாக்க 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2025ம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டம்.

மதுருஓய, கல்லோயா தேசிய சரணாலயங்களை புணரமைக்க உத்தேசம்

கோட்டை, நானு-ஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம் செய்ய யோசனை

அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்,

அன்னாசி, வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.

தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒரு வருடத்திற்கு நீக்க யோசனை,

பொலன்னறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நெற்களஞ்சியசாலைகளின் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை

மோட்டார் சைக்களில், கார் மற்றும் பஸ் தொடர்பில் காபன் வரியை அறிமுகப்படுத்த யோசனை

எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்றவாறு பாடசாலை மாணவர்களைத் தயார்படுத்த பாடவிதானத்தில் ரோபோ மற்றும் நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதேச வைத்திய பட்டப்பின் படிப்பிற்காக விசேட கற்கை நிறுவனம் அமைக்கப்படும்.

மகாபொல பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சப்ரகமுவ, மொரட்டுவ, வயம்ப பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களை அமைக்க 1250 மில்லியன் ஒதுக்கீடு.

ஸ்விசர்லாந்து, ஜேர்டன் ஒத்துழைப்புடன் புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் பதுளை, கண்டி, திருகோணமலை, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் நிறுவ யோசனை

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வாளகத்தை அபிவிருத்தி செய்ய, தகவல் மத்திய நிலையம், பொது நூலகம் போன்றவற்றை நிறுவ 200 மில்லியன் ஒதிக்கிட யோசனை

வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்ற வீடமைப்பு நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ஒதிக்கீட யோசனை

சிவனொளிபாத மலை, முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், மடு உள்ளிட்ட புனிதத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

மண்சரிவு அபாயம் காரணமாக இரத்தினபுரி, வெலிமடை பகுதிகளில் உள்ள நீதிமன்ற கட்டடங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்க யேசானை

கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு வழங்க உத்தேசம்

பழமை வாய்ந்த பொருளாதாரத்துடன் தொடர்புடைய சட்டங்களை மறுசீரமைக்க நடவடிக்கை

வரி இன்றி விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சப்பாத்துக்களை இறக்குமதி செய்ய இன்று முதல் நடவடிக்கை

விளையாட்டு அகடமி, விளையாட்டு பயற்சி நிலையங்களை நிறுவ 1500 ஒதிக்கீடு

திகன, பொலன்னறுவை, கல்முனை ஆகிய பகுதிகளிலுள்ள மைதானங்களை இரு வருடங்களில் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக வீடமைக்க 2.5 மில்லியன்

2018 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அனைத்து வங்கியூடான கொடுக்கல் வாங்கல்களின் போதும், 1000 ரூபாவிற்கு 20 சதம் விசேட வரி அறவிட நடவடிக்கை

2018 ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபான இறக்குமதிக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி.

Previous Post

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு

Next Post

வரவுசெலவு திட்டத்தில் இம்முறையும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Post
வரவுசெலவு திட்டத்தில் இம்முறையும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் இம்முறையும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures