தமது நல்லாட்சி அரசாங்கத்தின் எஞ்சியுள்ள 18 மாதங்களில் தாம் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர்கள் 1650 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புமிக்க கடமைகளை இனிமேல் சுமத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.