ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்வது குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை இதுவரையில் உத்தியோகபுர்வமாக சபாநாயகருக்கு அறிவிக்க வில்லையென பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்வதாயின் எதிர்வரும் 8 ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபாவிடம் வினவிய போது, அடுத்த வாரமளவில் எதிர்க் கட்சியில் அமர்வது குறித்து தமது குழு சபாநாயகரிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.