15 வயது மாணவியை கூட்டாக வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 13 மற்றும் 14 வயதான 4 சிறுவர்கள் கைது!
பிரிட்டனில் 15 வயதான சிறுமி ஒருவரை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 13 மற்றும் 14 வயதான 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் வேர்கிங்டன் நகரிலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 முதல் 7.20 வரையான காலப்பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதையடுத்து 13 மற்றும் 14 வயதான சிறுவர்கள் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக 5 சிறார் கள் கைது செய்யப்பட்டனர். எனினும், இவர்களில் ஒருவன் குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளான்.
முதலில் 13 வயதான இரு சிறுவர்களும் 14 வயதான சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனான 13 வயது சிறுவனே குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளான்.
எனினும் பின்னர் 13 வயதான மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய நான்கு சிறுவர் களும் பொலி ஸாரினால் விசாரிக்கப் படுகின்றனர்.