தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள கம்பிப்பாடு கடற்கரையில் சுமார் 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இது இலங்கைக் கடத்தப்படவிருந்தது என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனுஸ்கோடிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் நடத்தப்பட்டது. கம்பிபாடு கடற்பரப்பில் மிதந்த பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பொதிகள் மீட்கப்பட்டு தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்திய நாணய மதிப்பிப்பின் படி சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் தனிப் படை அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று தினங்களுக்குள் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்கள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2.7 தொன் எடைகொன்ட இரண்டு கோடி ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் போதை பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

