Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி

December 8, 2021
in News, இந்தியா
0
இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை  10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Army Helicopter Crash Live Updates: Army chopper carrying Chief of Defence Bipin Rawat on board crashes in Ooty, Rescue Operations ON, Check here Helicopter Crash in Tamil Nadu latest news

இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Indian Army helicopter with CDS Gen Bipin Rawat on board crashes

குறித்த ஹெலிக்கொப்டரில் 14 பேர் பயணித்தநிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் தீவர சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு 10 கிலோ மீற்றர் அதாவது  05 நிமிங்கள் இருக்கும்பொழுதே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

———————–முதல் செய்தி——————————-

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Image

குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே வெடித்துச் சிதரி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Image

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகொப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Image

ஹெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த குறித்த இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Image

விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இறுதி நிலைவரப்படி,

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம்ஐ17 வி5 வகை இராணுவ ஹெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவிலான கேரளாவின் இடுக்கி அணை மீண்டும் திறப்பு

Next Post

யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

Next Post
யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures