நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு சம்பவம்! 25 பேர் காயம்! தமிழர்களுக்கு பாதிப்பா?
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சியா சுற்றி ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதும் தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்தை விரைந்துள்ளன.
FBI மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக நகர கவுன்சிலர் குறிப்பிட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவத்திற்காக காரணம் தெளிவாக தெரியவில்லை. நியூ ஜெர்சி நகரில் ஏற்பட்ட குழாய் வெடி குண்டு வெடித்து சில மணித்தியாளங்களுக்குள் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர் ஆபத்து ஏற்படும் அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என நியூயோர்க் நகர தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு நகர விஜயம் செய்துள்ளதாக அவரின் பேச்சாளர் Bill de Blasio தெரிவித்துள்ளார்.
நம்பமுடியாத பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதனை தொடர்ந்து மக்கள் ஒவ்வொரு பக்கமும் ஓடுவதனை காண முடிந்ததாக சம்பவத்தை பார்த்த சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் வெடிப்புச் சம்பவத்தில் தமிழர்கள் யாரும் படுகாயமடைந்துள்ளனரா என்பது தெரியவரவில்லை.
இதேவேளை, நாளைய தினம் ஐ.நா பொதுசபைக் கூட்டம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.