ஹோமாகம – கொடகம பகுதியில் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சந்தேகநபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பல்வேறு வகையிலான 1149 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் T56 ரக துப்பாக்கியின் 9 ரவைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சந்தேகநபரிடமிருந்து மெகசின் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 41 வயதான சந்தேகநபர், ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.