அன்று மாற்றத்துக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாகவும், தாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாராவது அந்த செயற்திட்டத்துடன் இருக்கவில்லை என்று கூறினால் அது தொடர்பில் அவர்களிடம் கேட்குமாறும் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.